கடன் பத்திரங்கள் மூலம் 3717 கோடி நிதி - பாரத ஸ்டேட் வங்கி

March 10, 2023

கடன் பத்திரங்கள் வெளியிடுவதன் மூலம் 3717 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. குறிப்பாக, கூடுதல் அடுக்கு 1 (ஏடி 1) கடன் பத்திரங்கள் வெளியீட்டின் மூலம் நிதி திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேசில் 3 விதிகளை நிறைவு செய்யும் வகையிலான இந்த கடன் பத்திரங்களுக்கு, 8.25% கூப்பன் விகிதம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது 2000 கோடி மதிப்பில் வெளியிடப்பட்டது. ஆனால், அதைவிட 2.27 மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சுமார் 53 முதலீட்டாளர்கள் […]

கடன் பத்திரங்கள் வெளியிடுவதன் மூலம் 3717 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. குறிப்பாக, கூடுதல் அடுக்கு 1 (ஏடி 1) கடன் பத்திரங்கள் வெளியீட்டின் மூலம் நிதி திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேசில் 3 விதிகளை நிறைவு செய்யும் வகையிலான இந்த கடன் பத்திரங்களுக்கு, 8.25% கூப்பன் விகிதம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது 2000 கோடி மதிப்பில் வெளியிடப்பட்டது. ஆனால், அதைவிட 2.27 மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சுமார் 53 முதலீட்டாளர்கள் 4537 கோடி மதிப்பில் கடன் பத்திரங்களுக்கு விண்ணப்பித்திருந்தனர். அதில் 3717 கோடி மதிப்பிலான விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன் மூலம், ஏடி 1 கடன் பத்திர வழியிலான வங்கியின் மூலதன தளம் வலுவடைந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu