மும்பையில் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பெய்த கனமழையின் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மும்பையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோன்று மகாராஷ்டிராவின் புனே, இரத்னகிரி, ராய்காட் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பையில் நேற்று அதிகாலை ஒரு மணி முதல் காலை ஏழு மணி வரை பெய்த […]

மும்பையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பெய்த கனமழையின் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோன்று மகாராஷ்டிராவின் புனே, இரத்னகிரி, ராய்காட் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பையில் நேற்று அதிகாலை ஒரு மணி முதல் காலை ஏழு மணி வரை பெய்த கனமழையில் 300 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளது. இதன் காரணமாக மும்பையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu