பெரம்பலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பொய்தததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் திடீரென விடிய விடிய மழை விட்டு விட்டு பெய்தது.இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்க அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.