நீருக்கடியில் ஆய்வுகளை மேற்கொள்ள ரோபோ மீன் கண்டுபிடிப்பு

தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு வசதியாக, ரோபோ மீன் ஒன்றை பிரிட்டன் விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். இது ஆழ்கடல் ஆராய்ச்சிகளுக்கு பெரிதும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இது தொடர்பாக செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி, எடை குறைந்த மற்றும் விலை குறைந்த முறையில் ரோபோ மீன் உருவாக்கப்பட்டுள்ளது. பாலிமர் பொருள் மூலம் இது உருவாக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு நகரும் தன்மையை இந்த ரோபோ கொண்டுள்ளது. வெப்பநிலைக்கு ஏற்ப, […]

தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு வசதியாக, ரோபோ மீன் ஒன்றை பிரிட்டன் விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். இது ஆழ்கடல் ஆராய்ச்சிகளுக்கு பெரிதும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இது தொடர்பாக செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி, எடை குறைந்த மற்றும் விலை குறைந்த முறையில் ரோபோ மீன் உருவாக்கப்பட்டுள்ளது. பாலிமர் பொருள் மூலம் இது உருவாக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு நகரும் தன்மையை இந்த ரோபோ கொண்டுள்ளது. வெப்பநிலைக்கு ஏற்ப, ரோபோ மீனில் உள்ள துடுப்புகள் அசைக்கப்பட்டு, ரோபோ நகரும். IEEE RAS சர்வதேச மாநாட்டில் இந்த ஆராய்ச்சி தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. - இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu