மனிதக் கழிவுகளை உண்டு உயிர் வாழக்கூடிய ஈக்களை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். மரபணு மாற்றம் தொழில்நுட்பம் மூலம் இந்த ஈக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதை சூப்பர் பிளைகள் என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.
மனித மலத்தினால் சுகாதார மாசுபாடு ஏற்படுகிறது. இந்த நிலையில், மனித கழிவுகளை உண்டு, அதை பாதிப்பில்லாத கூறுகளாக உடைக்கும் ஈக்களை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம், போதுமான சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பகுதிகளில் எளிமையான வகையில் சுகாதாரத்தை மேம்படுத்த முடியும் என கூறுகின்றனர். அத்துடன், சுற்றுச்சூழலுக்கு மனித கழிவுகளால் ஏற்படும் பாதிப்பை பெருமளவு குறைக்க இந்த திட்டம் சிறந்த அணுகுமுறையாக இருக்கும் என கூறுகின்றனர்.