புதிய வகை ரத்த பிரிவை கண்டறிந்த விஞ்ஞானிகள்

September 19, 2024

NHS Blood and Transplant (NHSBT) மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்,ரத்த பிரிவு தொடர்பான 50 ஆண்டுகால மர்மத்தை தீர்த்துள்ளனர். AnWj என்றழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட இரத்த ஆன்டிஜென் குறித்தான புதிய தகவல்களை கண்டறிந்துள்ளனர். இதன் மூலம், MAL என்ற புதிய ரத்த பிரிவை கண்டுபிடித்துள்ளனர். லூயிஸ் டில்லி தலைமையிலான ஆராய்ச்சிக் குழு, AnWj ஆன்டிஜென் இல்லாத நோயாளிகளை எளிதாக கண்டறிய ஒரு புதிய மரபணு சோதனையை உருவாக்கியுள்ளது. இந்த சோதனையின் மூலம், ஆண்டுக்கு சுமார் […]

NHS Blood and Transplant (NHSBT) மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்,ரத்த பிரிவு தொடர்பான 50 ஆண்டுகால மர்மத்தை தீர்த்துள்ளனர். AnWj என்றழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட இரத்த ஆன்டிஜென் குறித்தான புதிய தகவல்களை கண்டறிந்துள்ளனர். இதன் மூலம், MAL என்ற புதிய ரத்த பிரிவை கண்டுபிடித்துள்ளனர்.

லூயிஸ் டில்லி தலைமையிலான ஆராய்ச்சிக் குழு, AnWj ஆன்டிஜென் இல்லாத நோயாளிகளை எளிதாக கண்டறிய ஒரு புதிய மரபணு சோதனையை உருவாக்கியுள்ளது. இந்த சோதனையின் மூலம், ஆண்டுக்கு சுமார் 400 நோயாளிகள் பயனடையலாம். மேலும், MAL மரபணுவில் ஏற்படும் மாற்றங்கள் தான் AnWj ஆன்டிஜென் இல்லாததற்கு காரணம் என்றும் இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இந்த புதிய கண்டுபிடிப்பு, இரத்த மாற்றம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க உதவும். மேலும், உலகளவில் மிக அரிதான இந்த வகை ரத்தத்தை கொண்ட நபர்களை எளிதில் கண்டறிந்து, இரத்த தானம் செய்யும் பணியை மேம்படுத்தும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu