அதிக நீர் வளத்துடன் புதிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு

புதிதாக உருவான நட்சத்திரத்தை சுற்றி தூசி படலம் வட்டம் அடித்து வருகிறது. அதற்குள் அதிக நீர் வளம் நீராவி வடிவில் உள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அங்குள்ள நீர் பூமியில் உள்ள மொத்த கடலில் உள்ள நீரின் அளவை விட 3 மடங்கு கூடுதலாக இருக்கும் என கூறியுள்ளனர். பூமியைப் போலவே தண்ணீர் உள்ள கிரகங்களுக்கான தேடுதல் வேட்டையில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், பூமியிலிருந்து 450 ஒளி ஆண்டுகள் தொலைவில், புதிய நட்சத்திரம் ஒன்றை சுற்றி வரும் […]

புதிதாக உருவான நட்சத்திரத்தை சுற்றி தூசி படலம் வட்டம் அடித்து வருகிறது. அதற்குள் அதிக நீர் வளம் நீராவி வடிவில் உள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அங்குள்ள நீர் பூமியில் உள்ள மொத்த கடலில் உள்ள நீரின் அளவை விட 3 மடங்கு கூடுதலாக இருக்கும் என கூறியுள்ளனர்.

பூமியைப் போலவே தண்ணீர் உள்ள கிரகங்களுக்கான தேடுதல் வேட்டையில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், பூமியிலிருந்து 450 ஒளி ஆண்டுகள் தொலைவில், புதிய நட்சத்திரம் ஒன்றை சுற்றி வரும் தூசி படலத்தில் புதிதாக கிரகம் ஒன்று உருவாகும் சூழல் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில், அதிகமான நீர் ஆவி வடிவில் உள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். Taurus என்ற விண்மீன் கூட்டத்தில் Tauri என்று பெயரிடப்பட்டுள்ள சிறிய நட்சத்திரத்தை சுற்றி நீராவி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ALMA கருவி மூலம் ஆவி வடிவில் நீர் உள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பான விரிவான தகவல்கள் நேச்சர் அஸ்ட்ரானமி இதழில் வெளியாகி உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu