உலகின் சக்தி வாய்ந்த சவுண்ட் லேசரை உருவாக்கிய சீன விஞ்ஞானிகள்

சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் உலகின் சக்தி வாய்ந்த (சவுண்ட் லேசர்) ஒலி லேசரை உருவாக்கியுள்ளனர். சீனாவில் உள்ள ஹூனான் நார்மல் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த விஞ்ஞானிகள், லேசர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள், 1 மைக்ரோ மீட்டர் நீளமுடைய சிலிக்கா பீட் பயன்படுத்தி ஒலி லேசரை உருவாக்கியுள்ளனர். வழக்கமான லேசர்களில் இருந்து ஒளி துகள்கள் போட்டான்களாக வெளியிடப்படும். ஆனால், இந்த லேசரிலிருந்து ஒலி துகள்கள் போனான்களாக வெளியிடப்படுகிறது. இதுவரை உலகில் உருவாக்கப்பட்ட ஒலி லேசர்களிலேயே அதிசக்தி வாய்ந்ததாக இது […]

சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் உலகின் சக்தி வாய்ந்த (சவுண்ட் லேசர்) ஒலி லேசரை உருவாக்கியுள்ளனர்.

சீனாவில் உள்ள ஹூனான் நார்மல் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த விஞ்ஞானிகள், லேசர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள், 1 மைக்ரோ மீட்டர் நீளமுடைய சிலிக்கா பீட் பயன்படுத்தி ஒலி லேசரை உருவாக்கியுள்ளனர். வழக்கமான லேசர்களில் இருந்து ஒளி துகள்கள் போட்டான்களாக வெளியிடப்படும். ஆனால், இந்த லேசரிலிருந்து ஒலி துகள்கள் போனான்களாக வெளியிடப்படுகிறது. இதுவரை உலகில் உருவாக்கப்பட்ட ஒலி லேசர்களிலேயே அதிசக்தி வாய்ந்ததாக இது அமைந்துள்ளது. மேலும், இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த ஹூய் ஜிங் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, வெளியேற்றப்படும் லேசரின் பிரகாசத்தை 10 மடங்கு அதிகரித்துள்ளனர். அதன்படி, மிகவும் பிரகாசமான ஒலி லேசராக இது உள்ளது. இதற்கு முன்னால் உருவாக்கப்பட்ட சவுண்ட் லேசர்கள் சில நிமிடங்கள் மட்டுமே நீடித்திருந்தது. ஆனால், இந்த லேசர் ஒரு மணி நேரம் வரையில் செயல்பட்டுள்ளது. எதிர்கால ஆராய்ச்சிகளில் இது முக்கிய பங்கு வகிக்கும் என விஞ்ஞானிகள் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu