ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் பயிற்சியில் இந்தியா பங்கேற்பு

July 25, 2024

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் இந்தியா உட்பட அனைத்து உறுப்பினர்களின் பாதுகாப்பு படையினர் சீனாவில் கூட்டு பயிற்சியை மேற்கொண்டனர். ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இந்தியா உட்பட அனைத்து உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு படையினர் சீனாவில் முதல் முறையாக பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியை கூட்டாக மேற்கொண்டனர். இன்ட்ராக்ஷன் 2024 என்று இந்த பயிற்சிக்கு பெயிரிடப்பட்டுள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் தன்னாட்சி பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கூட்டு பயிற்சி மூலம் செயல்பாட்டு திறன் […]

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் இந்தியா உட்பட அனைத்து உறுப்பினர்களின் பாதுகாப்பு படையினர் சீனாவில் கூட்டு பயிற்சியை மேற்கொண்டனர்.

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இந்தியா உட்பட அனைத்து உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு படையினர் சீனாவில் முதல் முறையாக பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியை கூட்டாக மேற்கொண்டனர். இன்ட்ராக்ஷன் 2024 என்று இந்த பயிற்சிக்கு பெயிரிடப்பட்டுள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் தன்னாட்சி பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கூட்டு பயிற்சி மூலம் செயல்பாட்டு திறன் மேம்பட்டதாகவும் புதிய மாதிரியை இது நிறுவியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த பயிற்சியை உருப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கண்காணித்தனர். இந்த பயிற்சியின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சீன அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் பரவியுள்ளதால் கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் உறுப்பு நாடுகளின் திறன் மற்றும் இயங்கும் தன்மையை மேம்படுத்துவதற்காக இந்த நேரடி பயிற்சி நடத்தப்பட்டது. முதல் முறையாக இந்தியா உட்பட அனைத்து உறுப்பு நாடுகளும் பங்கேற்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu