15 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் இருக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வாகனங்கள் 2023 ஏப்ரல் முதல் அழிக்கப்படும் என்றும் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
கடந்த நிதி ஆண்டின் பட்ஜெட் அறிவிப்பின்போது, மத்திய அரசு வாகன அழிப்புக் கொள்கையை அறிவித்தது. 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் இருக்கும் தனிநபர் வாகனங்களும் 15 ஆண்டுகளுக்கு மேலான வர்த்தக வாகனங்களும் தகுதி சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் அதில் தேர்ச்சியடையாத வாகனங்கள் அழிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில் 2023 ஏப்ரல் முதல் 15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்கள் அழிக்கப்பட இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகிறது. மாநில அரசுகள் தங்கள் வசமுள்ள 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் குறித்த விவரங்களை வழங்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.