கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கடல் உணவுகளின் மதிப்பு 809 கோடி டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய 2022-ம் நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில், 4.21% உயர்வாகும். மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் இதனை உறுதி செய்துள்ளது.
கடந்த நிதி ஆண்டில், உலர் இறால் ஏற்றுமதி அதிகமாக பதிவாகியுள்ளது. இதற்கான வரவேற்பு காரணமாக, ஒட்டுமொத்த கடல் உணவு ஏற்றுமதியும் வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், ஒட்டுமொத்த கடல் உணவு ஏற்றுமதி அளவு 1735286 டன் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய நிதியாண்டில், வெறும் 369264 டன் அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.