செபி ஊழியர்கள் தங்கள் குறைகளை வெளிப்படுத்த மௌன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செபி தலைவர் மதாபி பூரி புச்சின் கடுமையான நிர்வாகப் பாணி மற்றும் யதார்த்தமற்ற பணி இலக்குகளை விமர்சித்து வருகின்றனர்.
செபியில் நடக்கும் இந்த போராட்டம், இந்தியாவின் நிதித் துறையில் ஊழியர் நலன் மற்றும் நிர்வாகம் குறித்த முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. 55% HRA உயர்வு மறுக்கப்பட்டதால் செபி ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதுவும் போராட்டத்துக்கான காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனை நிதிச் சந்தையை எதிர்மறையாக பாதிக்கும் அபாயம் நிகழலாம் என்று கூறப்படுகிறது.