பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி - ஒரே நாளில் 2 லட்சம் கோடி இழப்பு

September 20, 2023

இன்று பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இன்று ஒரே நாளில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண், கிட்டதட்ட 800 புள்ளிகளை இழந்துள்ளது. இதனால், முதலீட்டாளர்களுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு நேரிட்டுள்ளது. குறிப்பாக, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் கடுமையாக சரிந்ததால், இன்றைய இழப்பு நேர்ந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 796 புள்ளிகளை இழந்து 66800.84 புள்ளிகளாக உள்ளது. […]

இன்று பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இன்று ஒரே நாளில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண், கிட்டதட்ட 800 புள்ளிகளை இழந்துள்ளது. இதனால், முதலீட்டாளர்களுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு நேரிட்டுள்ளது. குறிப்பாக, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் கடுமையாக சரிந்ததால், இன்றைய இழப்பு நேர்ந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 796 புள்ளிகளை இழந்து 66800.84 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 231.9 புள்ளிகளை இழந்து 19901.4 புள்ளிகளாக உள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கி, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், ரிலையன்ஸ், பி பி சி எல், ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, மஹிந்திரா, கோட்டக் வங்கி, டாடா ஸ்டீல் போன்ற அநேக நிறுவனங்கள் சரிவை சந்தித்தன. அதே வேளையில், பவர் கிரிட், என்டிபிசி, ஆக்சிஸ் வங்கி, ஓஎன்ஜிசி, கோல் இந்தியா, சன் ஃபார்மா போன்ற நிறுவனங்கள் ஏற்றமடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu