கடந்த 11 நாட்களாக, இந்திய பங்குச் சந்தை ஏற்றம் பெற்று வந்த நிலையில், இன்று வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 241.79 புள்ளிகளை இழந்து 67596.84 புள்ளிகளாக உள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 59.05 புள்ளிகள் சரிந்து 20133.3 ஆக உள்ளது.தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, பவர் கிரிட், டைட்டன், மஹிந்திரா, எச்டிஎஃப்சி லைஃப், பி பி சி எல், நெஸ்லே, பஜாஜ் பைனான்ஸ், எஸ் பி ஐ போன்ற நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே வேளையில், ஹிண்டால்கோ, எச்டிஎஃப்சி வங்கி, ஏர்டெல், அதானி போர்ட்ஸ், டாக்டர் ரெட்டிஸ், மாருதி சுசுகி, அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா ஸ்டீல், ஐ சி ஐ சி ஐ வங்கி போன்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.