இன்றைய வர்த்தக நாளில் பங்குச்சந்தை 1.6% உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 1330.96 புள்ளிகள் உயர்ந்து 80436.84 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 397.41 புள்ளிகள் உயர்ந்து 24541.15 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. குறிப்பாக, வங்கி மற்றும் ஐடி துறை பங்குகள் உயர்ந்துள்ளன.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, அதானி பவர், டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், டாடா ஸ்டீல், ஐடிசி, இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ், வோடபோன், சுஸ்லான் எனர்ஜி, எஸ் வங்கி, ஜொமாட்டோ, எச்டிஎஃப்சி வங்கி ஐ சி ஐ சி ஐ வங்கி, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் போன்ற முக்கிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன.