இந்திய பங்குச்சந்தை இன்று ஒரே நாளில் 1.48% வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 1272.07 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு 368.11 புள்ளிகளும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இறுதியாக, சென்செக்ஸ் 84299.78 புள்ளிகளிலும், நிஃப்டி 25810.85 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், ஐடிசி, டிசிஎஸ், இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ், அதானி கிரீன் எனர்ஜி, வோடபோன், எஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி போன்ற முக்கிய நிறுவனங்கள் சரிவடைந்துள்ளன. டாடா ஸ்டீல், அதானி பவர், அஸ்ட்ராஜெனெகா போன்ற குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே ஏற்றம் பெற்றுள்ளன.