நேற்றைய வர்த்தக நாளில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து, இன்று அதற்கு நேர்மாறாக சரிவை சந்தித்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 284.26 புள்ளிகளை இழந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 85.6 புள்ளிகளை இழந்து, 18771.25 ஆக உள்ள நிலையில், சென்செக்ஸ் 63238.89 புள்ளிகள் ஆக நிலை பெற்றுள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, எச்டிஎப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, மஹிந்திரா, எல்அன்ட்டி, டேவிஸ் லேப்ஸ், ஏர்டெல், பிபிசிஎல் ஆகிய நிறுவனங்கள் ஏற்றமடைந்துள்ளன. அதே வேளையில், அதானி எண்டர்பிரைசஸ், ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், பவர் கிரிட், பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவடைந்துள்ளன.