சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்ந்து, வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது

November 25, 2022

நேற்றைய வர்த்தக நாளின் போது, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 900 புள்ளிகள் உயர்ந்து, வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. சென்செக்ஸ் குறியீட்டு எண்ணின் புதிய உச்சமாக 62412.33 புள்ளிகள் பதிவானது. மேலும், நேற்றைய வர்த்தக நாளின் இறுதியில், சென்செக்ஸ் குறியீட்டு எண் 762.10 புள்ளிகள் உயர்ந்து, 62272.68 ஆக நிலை கொண்டிருந்தது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி குறியீட்டு எண், நேற்றைய வர்த்தக நாளின் முடிவில், 216.85 புள்ளிகள் உயர்ந்து, […]

நேற்றைய வர்த்தக நாளின் போது, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 900 புள்ளிகள் உயர்ந்து, வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. சென்செக்ஸ் குறியீட்டு எண்ணின் புதிய உச்சமாக 62412.33 புள்ளிகள் பதிவானது. மேலும், நேற்றைய வர்த்தக நாளின் இறுதியில், சென்செக்ஸ் குறியீட்டு எண் 762.10 புள்ளிகள் உயர்ந்து, 62272.68 ஆக நிலை கொண்டிருந்தது.

அதே வேளையில், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி குறியீட்டு எண், நேற்றைய வர்த்தக நாளின் முடிவில், 216.85 புள்ளிகள் உயர்ந்து, 18484.10 ஆக நிலை கொண்டிருந்தது. முன்னதாக, நேற்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில், நிஃப்டி குறியீட்டு எண், ஒரு வருட உச்சமாக 18529.70 புள்ளிகளை எட்டியது.

இந்திய பங்குச் சந்தையில், கடந்த இரு தினங்களாக காளையின் ஆதிக்கம் மேலோங்கி உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள மொத்த பங்குகளின் சந்தை மதிப்பு 283.9 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu