முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திடீரென்று செந்தில் பாலாஜிக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதால் அவரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. புழல் சிறையில் இருந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு மருத்துவர்கள் அவரை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பரிந்துரை செய்யப்பட்டதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் செந்தில் பாலாஜிக்கு மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.