பூமியை ஊடுருவி செல்லும் ஏழு வினோத பொருட்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனை கோஸ்ட் பார்ட்டிகல்ஸ் என அழைக்கின்றனர்.
அண்டார்டிகாவில், உறைபனிக்கு கீழே ஐஸ் கியூப் ஆய்வகம் அமைந்துள்ளது. இதில் ஆய்வு நடத்தி வரும் விஞ்ஞானிகள் 9.7 ஆண்டுகளுக்குப் பிறகு கோஸ்ட் பார்ட்டிகல்ஸ் ஐ கண்டறிந்துள்ளனர். இவை அஸ்ட்ரோபிஸிக்கல் நியூட்ரினோக்களால் ஆனது என தெரிவித்துள்ளனர். அதாவது, இவற்றின் நிறை பூஜ்ஜியமாக இருக்கும். மேலும், இதில் எந்தவித மின் அலைகளும் இருக்காது. ஒளிக்கு நிகரான வேகத்தில் பயணிக்கும். ஒவ்வொரு நொடியிலும் கிட்டதட்ட 100 ட்ரில்லியன் நியூட்ரினோக்கள் நம் உடலை தாண்டி செல்கின்றன. அவற்றின் வேகம் அதிகமாக உள்ளதால், நம்மால் அதை உணர முடியவில்லை. கோஸ்ட் பார்டிக்கல்ஸ் பற்றிய ஆய்வுகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து வருகின்றனர்.