உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா ராணுவத்தில் போரிட நிர்பந்திக்கப்படும் இந்தியர்கள்

March 6, 2024

ரஷ்ய நாட்டுக்கு சுற்றுலா சென்ற இந்திய இளைஞர்கள், ரஷ்ய ராணுவத்தில் இணைந்து உக்ரைனுக்கு எதிராக போரிட நிர்பந்திக்கப்படுவதாக காணொளி வெளியிட்டுள்ளனர். பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்த 7 இளைஞர்கள் கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி, ரஷ்யாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கிருந்து பெலாரசுக்கு சென்ற போது, ரஷ்ய ராணுவத்தில் இணைந்து உதவியாளர்களாக பணி செய்ய வேண்டும்; மறுத்தால் 10 வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்கள் ரஷ்ய ராணுவத்தில் இணைந்ததாக கூறியுள்ளனர். […]

ரஷ்ய நாட்டுக்கு சுற்றுலா சென்ற இந்திய இளைஞர்கள், ரஷ்ய ராணுவத்தில் இணைந்து உக்ரைனுக்கு எதிராக போரிட நிர்பந்திக்கப்படுவதாக காணொளி வெளியிட்டுள்ளனர்.

பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்த 7 இளைஞர்கள் கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி, ரஷ்யாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கிருந்து பெலாரசுக்கு சென்ற போது, ரஷ்ய ராணுவத்தில் இணைந்து உதவியாளர்களாக பணி செய்ய வேண்டும்; மறுத்தால் 10 வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்கள் ரஷ்ய ராணுவத்தில் இணைந்ததாக கூறியுள்ளனர். முதலில், உதவியாளர்களாக பணி செய்ய வேண்டும் எனக் கூறிய நிலையில், அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும், உக்ரைனுக்கு எதிராக போர் செய்ய அனுப்பப்படுவதாகவும் தற்போது காணொளி வெளியிட்டுள்ளனர். அத்துடன், பல்வேறு இந்திய இளைஞர்கள் தங்களைப் போல நிர்பந்திக்கப்பட்டுள்ளதாகவும் காணொளியில் குறிப்பிட்டுள்ளனர். எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த காணொளி வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu