பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியலில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கிளர்ச்சி குழுக்களும், பயங்கரவாத அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. அந்த மாகாணத்தின் பஞ்ச்கூர் நகரில், கட்டிடப் பணியில் ஈடுபட்ட 8 பஞ்சாப் தொழிலாளர்கள் நேற்று இரவு அமைதியாக உறங்கிக்கொண்டிருந்த போது, பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மற்றொரு தொழிலாளர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவத்துக்கு பிறகு, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பயங்கரவாதிகளை தேடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கிடையில், பலூசிஸ்தான் மாகாணத்தில் 20 தொழிலாளர்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர். அவர்களை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.