ஏற்றம் பெற்ற இந்திய பங்குச்சந்தை - சென்செக்ஸ் 555 புள்ளிகள் உயர்வு

September 1, 2023

இந்திய பங்குச் சந்தையில் இன்று சிறப்பான முன்னேற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று, பங்கு சந்தை ஏற்றமடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 555.75 புள்ளிகள் உயர்ந்து, 65387.16 புள்ளிகளாக உள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 181.5 புள்ளிகள் உயர்ந்து, 19435.3 புள்ளிகளாக உள்ளது. தனிப்பட்ட பங்குகளை பொருத்தவரை, என் டி […]

இந்திய பங்குச் சந்தையில் இன்று சிறப்பான முன்னேற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று, பங்கு சந்தை ஏற்றமடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 555.75 புள்ளிகள் உயர்ந்து, 65387.16 புள்ளிகளாக உள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 181.5 புள்ளிகள் உயர்ந்து, 19435.3 புள்ளிகளாக உள்ளது. தனிப்பட்ட பங்குகளை பொருத்தவரை, என் டி பி சி, ஓ என் ஜி சி, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், மாருதி சுசுகி, பஜாஜ் பைனான்ஸ், எல்டிஐ மைண்ட் ட்ரீ, அப்பல்லோ ஹாஸ்பிடல், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, கோல் இந்தியா உள்ளிட்ட அநேக நிறுவனங்கள் ஏற்றமடைந்துள்ளன. ஆனால், சிப்லா, டாக்டர் ரெட்டிஸ், ஹெச்டிஎஃப்சி லைஃப், அல்ட்ராடெக் சிமெண்ட், நெஸ்லே போன்ற சில நிறுவனங்கள் சரிவடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu