இன்றைய வர்த்தக நேர முடிவில் இந்திய பங்குச் சந்தை சிறிய அளவிலான இறக்கத்துடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 71.77 புள்ளிகள் சரிந்து 82890.94 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 32.41 புள்ளிகள் சரிந்து 25356.5 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், சுஸ்லான் எனர்ஜி, ஐ டி பி ஐ வங்கி, கல்யாண் ஜூவல்லர்ஸ், பஜாஜ் பைனான்ஸ் போன்றவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், இன்போசிஸ், ரிலையன்ஸ், ஐடிசி, அதானி பவர், பதஞ்சலி ஃபுட்ஸ், ஜொமாட்டோ, வோடபோன், எஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி போன்றவை சரிவடைந்துள்ளன.