கடந்த 4 - 5 தினங்களாக, இந்திய பங்குச் சந்தை ஏற்ற இறக்கப் பாதையில் பயணித்து வருகிறது. அதன்படி, நேற்று ஏற்றம் பெற்ற பங்குச்சந்தை, இன்று இறக்கத்துடன் நிறைவடைந்து உள்ளது. இன்றைய வர்த்தக நேர இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 307.63 புள்ளிகள் சரிவடைந்து, 65688.18 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 89.45 புள்ளிகள் சரிந்து 19543.1 புள்ளிகளாக உள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, அதானி எண்டர்பிரைசஸ், இண்டஸ் இண்ட் வங்கி, அதானி போர்ட்ஸ், டைட்டன், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்றமடைந்துள்ளன. அதே வேளையில், ஏசியன் பெயிண்ட்ஸ், கோட்டக் வங்கி, ஐடிசி, பிரிட்டானியா, ஹெச்டிஎஃப்சி வங்கி, டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, எஸ் பி ஐ, ஆக்சிஸ் வங்கி ஆகியவை சரிவை சந்தித்துள்ளன.