இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில் ஏற்றம் பெற்ற பங்குச் சந்தை, அதன் பிறகு வீழ்ச்சி அடைந்து, இறுதியில் சிறிய அளவிலான ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 63.47 புள்ளிகள் உயர்ந்து, 71721.18 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 28.5 புள்ளிகள் உயர்ந்து, 21647.2 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், பி பி சி எல், ஈச்சர் மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், பவர் கிரிட், டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி, மாருதி சுசுகி ஆகியவை உயர்ந்துள்ளன. அதே சமயத்தில், இன்போசிஸ், டாக்டர் ரெட்டிஸ், எஸ்பிஐ லைஃப், ஹிந்துஸ்தான் யூனிலீவர், விப்ரோ, எல் அண்ட் டி, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.