ஏற்ற இறக்கப் பாதையில் இந்திய பங்குச் சந்தை

September 24, 2024

இன்று ஏற்ற இறக்க பாதையில் பயணித்த இந்திய பங்குச்சந்தை, இறுதியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இன்றி நிறைவடைந்துள்ளது. நேற்றைய வர்த்தக நாளுடன் ஒப்பிடுகையில் 0.01% அளவில் மட்டுமே மாற்றம் ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 84914.04 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 25940.4 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளது. தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், அதானி பவர், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், அஸ்ட்ரஸனக்கா, எஸ் வங்கி, டாடா பவர், எச்டிஎப்சி வங்கி ஆகியவை ஏற்றம் […]

இன்று ஏற்ற இறக்க பாதையில் பயணித்த இந்திய பங்குச்சந்தை, இறுதியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இன்றி நிறைவடைந்துள்ளது. நேற்றைய வர்த்தக நாளுடன் ஒப்பிடுகையில் 0.01% அளவில் மட்டுமே மாற்றம் ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 84914.04 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 25940.4 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளது.

தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், அதானி பவர், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், அஸ்ட்ரஸனக்கா, எஸ் வங்கி, டாடா பவர், எச்டிஎப்சி வங்கி ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், ரிலையன்ஸ், ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, வோடபோன், பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆம்பர் எண்டர்பிரைசஸ் ஆகியவை சரிவடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu