பங்குச் சந்தை ஏற்ற இறக்கமின்றி நிறைவு

July 8, 2024

இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச் சந்தை பெரிய அளவிலான மாற்றங்கள் ஏதுமின்றி நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 36.22 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 79960.38 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 3.3 புள்ளிகள் சரிவடைந்து 24320.55 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில், ரயில்வே துறை சார்ந்த பங்குகள் அதிக உயர்வை பதிவு செய்துள்ளன. குறிப்பாக, இந்தியன் […]

இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச் சந்தை பெரிய அளவிலான மாற்றங்கள் ஏதுமின்றி நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 36.22 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 79960.38 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 3.3 புள்ளிகள் சரிவடைந்து 24320.55 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், ரயில்வே துறை சார்ந்த பங்குகள் அதிக உயர்வை பதிவு செய்துள்ளன. குறிப்பாக, இந்தியன் ரயில்வே பைனான்ஸ், ரயில் விகாஸ் நிகாம் போன்றவை, இன்று ஏற்றம் பெற்ற முதன்மை நிறுவனங்களாக உள்ளன. இவை தவிர, ஐடிசி, டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ், பேடிஎம் ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், வோடபோன், எஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, கொச்சின் ஷிப்யார்டு, டாடா ஸ்டீல், அதானி பவர், டிசிஎஸ் போன்றவை சரிவடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu