கனடாவின் குற்றச்சாட்டிற்கு ஃபை ஐஸ் தகவல்கள் அடிப்படை - அமெரிக்கா

September 25, 2023

ஆஸ்திரேலியா கனடா இங்கிலாந்து அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய ஐந்து நாடுகளின் உளவுத்துறை கூட்டமைப்பு தான் ஃபை ஐஸ் எனப்படும் அமைப்பு. உலகளாவிய பயங்கரவாத செயல்கள் குறித்து ரகசிய தகவல்கள் பெறப்பட்டு இந்த ஐந்து நாடுகளுக்கு இடையே பரிமாற்றம் செய்யப்படும். பின்பு அதன் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். கனடாவில் ஹர்பிப் சிங் நிஜார் எனும் காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவிற்கு பெரும் பங்கு உண்டு என்று கனடா பிரதமர் அதிபர் ஜஸ்டின் […]

ஆஸ்திரேலியா கனடா இங்கிலாந்து அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய ஐந்து நாடுகளின் உளவுத்துறை கூட்டமைப்பு தான் ஃபை ஐஸ் எனப்படும் அமைப்பு. உலகளாவிய பயங்கரவாத செயல்கள் குறித்து ரகசிய தகவல்கள் பெறப்பட்டு இந்த ஐந்து நாடுகளுக்கு இடையே பரிமாற்றம் செய்யப்படும். பின்பு அதன் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கனடாவில் ஹர்பிப் சிங் நிஜார் எனும் காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவிற்கு பெரும் பங்கு உண்டு என்று கனடா பிரதமர் அதிபர் ஜஸ்டின் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் இந்தியா இதனை மறுத்துள்ளது.இந்நிலையில், ஹர்திக் கொலையில் இந்திய அரசுக்கு பங்கு இருப்பதற்கான ஆதாரங்கள் ஃபை ஐஸ் அமைப்பின் மூலம் கனடாவிற்கு தெரிய வந்ததாகவும் இதனை அமெரிக்காவிடம் கனடா பகிர்ந்ததாகவும் கனடாவிற்கான அமெரிக்க தூதர் டேவிட் ஒரு தனியார் தொலைக்காட்சியில் கூறியுள்ளார். இந்த கொலை குற்றசாட்டு சம்பந்தமாக கனடாவுடன் அமெரிக்கா ஒத்துழைப்பு தருவதாகவும் இந்த கொலைக்கு பொறுப்பானவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu