பாகிஸ்தான் பிரதமராக 2 வது முறை பதவி ஏற்கிறார் ஷெபாஸ் ஷெரீப்

March 4, 2024

பாகிஸ்தான் பிரதமராக இரண்டாம் முறையாக இன்று பதவி ஏற்கிறார் ஷெபாஸ் ஷெரீப். அவருக்கு வயது 72. பாகிஸ்தானில், அண்மையில் நடைபெற்ற பொது தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில், நவாஸ் ஷெரீப் தலைமையிலான பி எம் எல் கட்சியும், பிலாவல் பூட்டோ தலைமையிலான பிபிபி கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கின்றன. இந்நிலையில், பிரதமர் பதவிக்கு பி எம் எல் கட்சியை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து இம்ரான் கான் கட்சியை […]

பாகிஸ்தான் பிரதமராக இரண்டாம் முறையாக இன்று பதவி ஏற்கிறார் ஷெபாஸ் ஷெரீப். அவருக்கு வயது 72.

பாகிஸ்தானில், அண்மையில் நடைபெற்ற பொது தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில், நவாஸ் ஷெரீப் தலைமையிலான பி எம் எல் கட்சியும், பிலாவல் பூட்டோ தலைமையிலான பிபிபி கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கின்றன. இந்நிலையில், பிரதமர் பதவிக்கு பி எம் எல் கட்சியை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து இம்ரான் கான் கட்சியை சேர்ந்த உமர் அயூப் கான் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதற்கான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் உமர் அயுப் கான் 92 வாக்குகளும், ஷெபாஸ் ஷெரீப் 201 வாக்குகளும் பெற்றனர். அதன்படி, இரண்டாம் முறையாக பாகிஸ்தான் பிரதமராக சபாஷ் ஷரீஃப் இன்று பதவி ஏற்கிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu