ஷேக் ஹசீனா மீது கொலை வழக்குப்பதிவு

August 13, 2024

ஆகஸ்ட் 5 அன்று ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் வீழ்ச்சி அடைந்ததை தொடர்ந்து, வங்கதேசத்தில் 230 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஜூலையில் நடந்த ஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டங்களுக்குப் பின், இறப்பு எண்ணிக்கை 560 ஆக அதிகரித்தது. ஜூலை 19 அன்று நடந்த மோதலின் போது மளிகைக் கடை உரிமையாளர் ஒருவரின் மரணம் தொடர்பாக, ஷேக் ஹசீனா, மற்றும் மேலும் ஆறு பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த பின்னர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். தற்போது, […]

ஆகஸ்ட் 5 அன்று ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் வீழ்ச்சி அடைந்ததை தொடர்ந்து, வங்கதேசத்தில் 230 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஜூலையில் நடந்த ஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டங்களுக்குப் பின், இறப்பு எண்ணிக்கை 560 ஆக அதிகரித்தது. ஜூலை 19 அன்று நடந்த மோதலின் போது மளிகைக் கடை உரிமையாளர் ஒருவரின் மரணம் தொடர்பாக, ஷேக் ஹசீனா, மற்றும் மேலும் ஆறு பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த பின்னர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். தற்போது, நோபல் பரிசு பெற்ற 84 வயதான முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. BNP உட்பட ஏழு அரசியல் கட்சிகள் யூனுஸை சந்தித்து, இடைக்கால அரசாங்கத்தை ஆதரித்தும், கலிதா ஜியா மற்றும் தாரிக் ரஹ்மான் உட்பட தங்கள் தலைவர்களுக்கு எதிரான வழக்குகளை திரும்பப் பெறுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த நிலையில், ஹசீனா மீதான கொலை வழக்கு செய்தி வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu