மகாராஷ்டிரா சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் - உத்தவ் தாக்கரே

January 10, 2024

மகாராஷ்டிரா மாநிலத்தின் சபாநாயகர் ராகுல் நர்வேகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இதனை தாக்கல் செய்துள்ளார். மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது அணியில் உள்ள எம்எல்ஏக்கள் ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீது கடந்த டிசம்பர் 31 க்குள் முடிவு எடுக்க வேண்டும் என மகாராஷ்டிரா மாநில சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் பின்னர், கால […]

மகாராஷ்டிரா மாநிலத்தின் சபாநாயகர் ராகுல் நர்வேகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இதனை தாக்கல் செய்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது அணியில் உள்ள எம்எல்ஏக்கள் ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீது கடந்த டிசம்பர் 31 க்குள் முடிவு எடுக்க வேண்டும் என மகாராஷ்டிரா மாநில சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் பின்னர், கால அவகாசம் 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. ஆனால், சபாநாயகர் ராகுல் நர்வேகர், இந்த விவகாரத்தில் இன்னும் முடிவெடுக்கவில்லை. அதே சமயத்தில், சட்டத்துக்கு புறம்பாக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை ராகுல் நர்வேகர் சந்தித்து பேசி உள்ளார். எனவே, இந்த விவகாரத்தின் மீது சபாநாயகரின் முடிவு நியாயமானதாக இருக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, உச்ச நீதிமன்றத்தில் அவர் மீது பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. - இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu