அமெரிக்கா - விர்ஜினியா வால்மார்ட் விற்பனையகத்தில் துப்பாக்கிச் சூடு - 6 பேர் பலி

November 24, 2022

நவம்பர் 22ஆம் தேதி, அமெரிக்காவின் வெர்ஜீனியா பகுதியில் உள்ள வால்மார்ட் விற்பனையகத்திற்குள் நுழைந்த ஒருவர், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில், 6 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கியால் சுட்டவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார் என்றும், உயிரிழந்த ஆறு பேரில் அவரும் ஒருவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால், கொலையாளியின் அடையாளம் மற்றும் கொலைக்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அமெரிக்காவில், நன்றி தெரிவிக்கும் பெருநாள் கொண்டாட்டங்களுக்கு நடுவே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதால் கலக்கம் ஏற்பட்டுள்ளது. […]

நவம்பர் 22ஆம் தேதி, அமெரிக்காவின் வெர்ஜீனியா பகுதியில் உள்ள வால்மார்ட் விற்பனையகத்திற்குள் நுழைந்த ஒருவர், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில், 6 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கியால் சுட்டவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார் என்றும், உயிரிழந்த ஆறு பேரில் அவரும் ஒருவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால், கொலையாளியின் அடையாளம் மற்றும் கொலைக்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

அமெரிக்காவில், நன்றி தெரிவிக்கும் பெருநாள் கொண்டாட்டங்களுக்கு நடுவே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதால் கலக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் மனம் உடைந்து உள்ளதாக வெர்ஜினியா மாகாணத்தின் செனேட்டர் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், 2022 ஆம் ஆண்டில், 600 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக துப்பாக்கி வன்முறை குறித்த வலைத்தளம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu