அமெரிக்காவில் குருத்வாரா வாசலில் சீக்கிய இசைக்கலைஞர் சுட்டுக்கொலை

March 1, 2024

அமெரிக்காவின் தென்கிழக்கு கிழக்கில் உள்ளது அலபாமா மாகாணத்தில் உள்ள குருத்வாரா வாசலில் சீக்கிய இசைக்கலைஞர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலத்தின் பீஜ்னோர் மாவட்டத்தில் டண்டா சகுவாலா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 29 வயதான ராஜசிங் என்பவர் சுமார் ஒன்றரை ஆண்டு காலமாக அமெரிக்காவில் வசித்து வந்தார். கீர்த்தன் எனப்படும் சீக்கிய மதத்தின் பக்தி பாடல்களை பாடுவதில் இவர் திறமை மிக்கவர். இந்நிலையில், அலபாமா மாகாணத்தில் உள்ள குருத்வாரா எனப்படும் சீக்கிய வழிபாட்டு தளத்திற்கு […]

அமெரிக்காவின் தென்கிழக்கு கிழக்கில் உள்ளது அலபாமா மாகாணத்தில் உள்ள குருத்வாரா வாசலில் சீக்கிய இசைக்கலைஞர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் பீஜ்னோர் மாவட்டத்தில் டண்டா சகுவாலா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 29 வயதான ராஜசிங் என்பவர் சுமார் ஒன்றரை ஆண்டு காலமாக அமெரிக்காவில் வசித்து வந்தார். கீர்த்தன் எனப்படும் சீக்கிய மதத்தின் பக்தி பாடல்களை பாடுவதில் இவர் திறமை மிக்கவர். இந்நிலையில், அலபாமா மாகாணத்தில் உள்ள குருத்வாரா எனப்படும் சீக்கிய வழிபாட்டு தளத்திற்கு வெளியே இவர் நின்று இருந்தார். அப்போது அங்கு அடையாளம் தெரியாத சிலர் வந்து அவரை நோக்கி சுட்டனர். இதில் அவருடைய வயிற்றுப் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து அங்கேயே உயிரிழந்தார். இந்த பகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மீது நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும். இது வெறுப்புணர்வு காரணமாக நடைபெற்று இருக்கலாம் என்று அவரது குடும்பத்தார் கூறியுள்ளனர். இந்தியாவிற்கு அவர் உடலை கொண்டுவர பிரதமர் மோடியிடம் அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu