தென்கொரியாவை தாக்குவதுபோல ஏவுகணை ஒத்திகை பயிற்சி - வடகொரியா ஒப்புதல்

September 1, 2023

தென்கொரியாவை தாக்குவதுபோல ஏவுகணை ஒத்திகை பயிற்சி மேற்கொண்டதாக வடகொரியா ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த சில நாட்களாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் தங்களது நாட்டின் பாதுகாப்புக்காக தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இது வடகொரியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த போர் பயிற்சிகளை நிறுத்தும்படி வடகொரியா எச்சரிக்கை செய்தது. ஆனால், தென்கொரியா தொடர்ந்து அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தென்கொரியாவில் […]

தென்கொரியாவை தாக்குவதுபோல ஏவுகணை ஒத்திகை பயிற்சி மேற்கொண்டதாக வடகொரியா ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் தங்களது நாட்டின் பாதுகாப்புக்காக தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இது வடகொரியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த போர் பயிற்சிகளை நிறுத்தும்படி வடகொரியா எச்சரிக்கை செய்தது. ஆனால், தென்கொரியா தொடர்ந்து அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், தென்கொரியாவில் உள்ள ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்துவது போல் வடகொரியா ஒத்திகை பயிற்சி மேற்கொண்டது. போர் மூளும் அபாயம் ஏற்பட்டால் தென்கொரிய எல்லைகளை எவ்வாறு ஆக்கிரமிப்பது என்பது குறித்தும் ஒத்திகை பயிற்சி நடத்தியது வட கொரியா. இதற்காக இரண்டு அதிநவீன ஏவுகணைகளை சோதனை செய்து பார்த்தது. இதற்கு தென்கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐநாவுடன் ஏற்பட்ட உடன்படிக்கையை மீறி வடகொரியா செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இந்த செயல் சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu