சிங்கப்பூர் நாட்டில் கொரோனா பரவல் வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் பொதுமக்களை முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தி உள்ளது.
கடந்த டிசம்பர் 3 முதல் டிசம்பர் 9ம் தேதி வரையில், சிங்கப்பூர் நாட்டில் கொரோனா பாதிப்பு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட கொரோனா தொற்று நோயாளிகள் எண்ணிக்கை 56043 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில், தொற்று பாதிப்பு 32035 என்ற எண்ணிக்கையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், சராசரியாக, கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் 225 யில் இருந்து 350 ஆக உயர்ந்துள்ளது. எனவே, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்குமாறு சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன், பொது இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தியுள்ளது. மேலும், சிங்கப்பூர் நாட்டில் பி ஏ 2.86 வகையறாவின் உட்பிரிவான ஜே என் 1 கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்படுவதாக அறிவித்துள்ளது.