14.8 பில்லியன் முதலீட்டில் இந்திய விரிவாக்கத்தில் களமிறங்கும் சிங்கப்பூர் ரியல் எஸ்டேட் நிறுவனம்

September 4, 2024

சிங்கப்பூரின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான கேபிட்டாலேண்ட், இந்தியாவில் தனது 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், தனது முதலீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. வரும் 2028 ஆம் ஆண்டுக்குள் 14.8 பில்லியன் டாலராக முதலீட்டை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த முடிவு, இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் அதன் எதிர்கால வாய்ப்புகள் மீது கேபிட்டாலேண்ட் எவ்வளவு நம்பிக்கை கொண்டுள்ளது என்பதை காட்டுகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் கேபிட்டாலேண்டின் இந்திய முதலீடு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இது, இந்தியா […]

சிங்கப்பூரின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான கேபிட்டாலேண்ட், இந்தியாவில் தனது 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், தனது முதலீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. வரும் 2028 ஆம் ஆண்டுக்குள் 14.8 பில்லியன் டாலராக முதலீட்டை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த முடிவு, இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் அதன் எதிர்கால வாய்ப்புகள் மீது கேபிட்டாலேண்ட் எவ்வளவு நம்பிக்கை கொண்டுள்ளது என்பதை காட்டுகிறது.

கடந்த ஏழு ஆண்டுகளில் கேபிட்டாலேண்டின் இந்திய முதலீடு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இது, இந்தியா கேபிட்டாலேண்டின் வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை காட்டுகிறது. கேபிட்டாலேண்ட் இந்தியாவின் முக்கிய நகரங்களில் 14 வணிக மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu