சென்னை மந்தைவெளி மேற்குவட்ட சாலைக்கு பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் பெயர் 

March 22, 2023

சென்னை மந்தைவெளி மேற்குவட்ட சாலைக்கு பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் பெயர் சூட்டி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழ் திரையுலகின் தலைசிறந்த பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் 1923 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி பிறந்தார். தனது 60 ஆண்டுகால இசைப் பயணத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 11 மொழித் திரைப்படங்களில் பாடியுள்ளார். பேரவைச் செம்மல், கலைமாமணி, பத்மஸ்ரீ உள்ளிட்ட ஏராளமான […]

சென்னை மந்தைவெளி மேற்குவட்ட சாலைக்கு பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் பெயர் சூட்டி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழ் திரையுலகின் தலைசிறந்த பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் 1923 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி பிறந்தார். தனது 60 ஆண்டுகால இசைப் பயணத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 11 மொழித் திரைப்படங்களில் பாடியுள்ளார். பேரவைச் செம்மல், கலைமாமணி, பத்மஸ்ரீ உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். 2002-ல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராக நியமிக்கப்பட்டார். டிஎம்எஸ் 91-வது வயதில் 2013 ஆம் ஆண்டு மறைந்தார்.

இந்நிலையில் டி.எம்.சவுந்தரராஜன் நூற்றாண்டு விழாவை ஒட்டி, வரும் 24 ஆம் தேதி சென்னை மந்தவெளியில் அவர் வாழ்ந்த வீடு அமைந்த மேற்கு வட்டச் சாலைக்கு 'டி.எம்.சவுந்தரராஜன் சாலை' என்ற பெயரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சூட்டுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu