முதல்முறையாக 19000 கோடி இலக்கை தாண்டிய மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்

March 8, 2024

கடந்த பிப்ரவரி மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் புதிய உச்சம் பதிவாகியுள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 19186.58 கோடி அளவில் முதலீடுகள் குவிந்துள்ளன. இதுவே ஜனவரி மாதத்தில் 18838.33 கோடி அளவில் முதலீடுகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை பொறுத்தவரை, இந்தியாவில் தொடர்ச்சியாக வளர்ச்சி பதிவாகி வருகிறது. அந்த வகையில், SIP AUM ஆனது பிப்ரவரியில் 2.49% உயர்ந்து, 10.52 லட்சம் கோடி அளவில் பதிவாகியுள்ளது. இது கடந்த டிசம்பரில் 10.26 லட்சம் கோடியாக […]

கடந்த பிப்ரவரி மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் புதிய உச்சம் பதிவாகியுள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 19186.58 கோடி அளவில் முதலீடுகள் குவிந்துள்ளன. இதுவே ஜனவரி மாதத்தில் 18838.33 கோடி அளவில் முதலீடுகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை பொறுத்தவரை, இந்தியாவில் தொடர்ச்சியாக வளர்ச்சி பதிவாகி வருகிறது. அந்த வகையில், SIP AUM ஆனது பிப்ரவரியில் 2.49% உயர்ந்து, 10.52 லட்சம் கோடி அளவில் பதிவாகியுள்ளது. இது கடந்த டிசம்பரில் 10.26 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், எஸ் ஐ பி கணக்குகள் எண்ணிக்கை வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. 820.17 லட்சமாக எ ஸ் ஐ பிகணக்குகளின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இது ஜனவரியில் 791.71 லட்சமாக மட்டுமே இருந்தது. ஆனால், புதிதாக தொடங்கப்படும் SIP கணக்குகள் எண்ணிக்கை பிப்ரவரியில் சரிவை சந்தித்துள்ளது. ஜனவரியில் 51.84 லட்சமாக இருந்த புதிய கணக்குகள் எண்ணிக்கை, பிப்ரவரியில் 49.79 லட்சமாக சரிவடைந்துள்ளது. மேலும், சராசரியாக மியூச்சுவல் ஃபண்டுகளில் இருக்கும் நிதி, பிப்ரவரியில் 54.52 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது ஜனவரியில் 52.89 லட்சம் கோடியாக இருந்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu