சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்து காரணமாக 25 வயது தொழிலாளர் உயிரிழப்பு.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த வெம்பக்கோட்டை அருகே, குகன்பாறை செவல்பட்டி கிராமத்தில் பாலமுருகனுக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. இன்று காலை வேலைக்கு வந்த சில தொழிலாளர்கள் மருந்து கலவைகளை தயாரிக்கும்போது, எதிர்பாராத உராய்வு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில், 25 வயதான கோவிந்தராஜ் உயிரிழந்தார், மேலும் 19 வயதான குருமூர்த்தி தீவிரமாக காயமடைந்துள்ளார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவிந்தராஜின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி வழங்குவதாகவும், குருமூர்த்திக்கு ரூ.2 லட்சம் வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.