கிருஷ்ண ராஜ சாகர் மற்றும் கபினி அணைகளான கர்நாடக அணைகளில் இருந்து இன்று வினாடிக்கு 6,398 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்திற்கு கர்நாடக அணைகளான கிருஷ்ண ராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 6398 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை கிருஷ்ண ராஜ சாகர் 124.80 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 101.58 அடியாக இருந்தது. இங்கு வினாடிக்கு 2300 கன அடி தண்ணீர் வரப்பட்ட நிலையில் அணையிலிருந்து வினாடிக்கு 4398 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதே போல் கபினி அணை 84 உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 73.85 அடியாக இருந்தது.இது வினாடிக்கு 2594 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் வினாடிக்கு 2000 கன அடி தண்ணீரை வெளியேற்றி வருகிறது.