தயார் நிலையில் ஆதித்யா எல் 1 - இஸ்ரோ

சந்திரயான் 3 திட்டத்தை தொடர்ந்து, ஆதித்யா எல் 1 திட்டத்திற்கு தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆதித்யா எல் 1 சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படும் செயற்கைக்கோள் ஆகும். இது இந்தியாவின் முதல் சூரியன் திட்டம் ஆகும். ஆதித்யா எல் 1 செயற்கைக்கோள், பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட உள்ளது. அங்கிருந்தபடி, இது சூரியனை ஆய்வு செய்ய உள்ளது. ஆகஸ்ட் மாத இறுதியில் ஏவப்படுவதற்கு, ஆதித்யா எல் 1 தயார் நிலையில் […]

சந்திரயான் 3 திட்டத்தை தொடர்ந்து, ஆதித்யா எல் 1 திட்டத்திற்கு தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆதித்யா எல் 1 சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படும் செயற்கைக்கோள் ஆகும். இது இந்தியாவின் முதல் சூரியன் திட்டம் ஆகும்.

ஆதித்யா எல் 1 செயற்கைக்கோள், பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட உள்ளது. அங்கிருந்தபடி, இது சூரியனை ஆய்வு செய்ய உள்ளது. ஆகஸ்ட் மாத இறுதியில் ஏவப்படுவதற்கு, ஆதித்யா எல் 1 தயார் நிலையில் உள்ளது. அதன்படி, இஸ்ரோ தலைமை இடமான பெங்களூருவில் இருந்து, ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திற்கு ஆதித்யா எல் 1 வந்தடைந்துள்ளது. இது, பி எஸ் எல் வி சி 57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu