செப்டம்பர் 1 அன்று, சூரியனின் தென்கிழக்கு விளிம்பின் பின்புறத்தில் பெரிய வெடிப்பு ஏற்பட்டு, விண்வெளியில் சக்திவாய்ந்த CME கதிர்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. இந்த வெடிப்பு M5.5 வகை ஃப்ளேர் ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெடிப்பால் வெளியான CME கதிர்கள் வெள்ளி கிரகத்தை நோக்கி செல்கிறது. இன்றைய தினம், அவை வெள்ளிக்கோளை அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி கோளின் மீது தொடர்ச்சியாக சூரிய புயல் தாக்கம் நிகழ்கிறது. இது அண்மையில் நிகழும் மூன்றாவது CME தாக்குதல் ஆகும். பூமியைப் போல பாதுகாப்பு காந்தப்புலம் இல்லாத வெள்ளி, இத்தகைய சூரிய நிகழ்வுகளிலிருந்து வளிமண்டல அரிப்புக்கு அதிக பாதிப்புக்குள்ளாகிறது. மேலும், சூரியன் அதன் உச்சபட்ச சுழற்சி காலத்தை எட்டுவதால், வெள்ளி பற்றிய தொடர்ச்சியான கண்காணிப்பு அவசியமாகிறது என்று வானியலாளர்கள் கூறுகிறார்கள்.