இன்று சோனியா காந்தி உட்பட 14 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுள்ளனர்.

இன்று சோனியா காந்தி உட்பட 14 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் 2ம் தேதியுடன், 7 மத்திய அமைச்சர்கள் உட்பட 49 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதையடுத்து, 14 பேர் இன்று புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டனர். மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். ராஜஸ்தானின் மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி பொறுப்பேற்றுக்கொண்டார். மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ, ஒடிசா மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றுக் […]

இன்று சோனியா காந்தி உட்பட 14 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 2ம் தேதியுடன், 7 மத்திய அமைச்சர்கள் உட்பட 49 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதையடுத்து, 14 பேர் இன்று புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டனர். மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். ராஜஸ்தானின் மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி பொறுப்பேற்றுக்கொண்டார். மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ, ஒடிசா மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர்களைத் தவிர, கர்நாடகா சார்பில் அஜய் மக்கன், உத்திரபிரதேசம் சார்பில் ஆர்பிஎன் சிங், மேற்கு வங்கம் சார்பில் சாமிக் பட்டாச்சாரியா, ஆந்திர பிரதேசம் சார்பில் கோலா பாபு ராவ், மேத்தா ரகுநாத ரெட்டி, யெரும் வெங்கட் சுப்பா ரெட்டி ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். சோனியா காந்தி மாநிலங்களவை உறுப்பினராக முதல் முறையாக பொறுப்பேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu