தென்கொரியாவில் வெப்ப அலை தாக்குதலால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 1546 ஆக உள்ளது என்று அந்நாட்டு உள்துறை அமைச்சரும் தெரிவித்துள்ளது.
தென்கொரியாவில் வெப்பம் தொடர்பான நோய்களுக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு 2,35,850 கோழிகள் உட்பட 2,57,483 கால்நடைகளும் பலியாகி உள்ளன. இந்த வெப்ப அலை மேலும் 10 நாட்களுக்கு தொடர உள்ளது என்றும் பகல் நேரத்தில் சராசரி வெப்பத்தை விட கூடுதலாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 30 டிகிரி முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2018 பிறகு இந்த ஆண்டுதான் அதிகப்படியான வெப்பம் பதிவாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.