புகுஷிமா அச்சத்தால் தென் கொரிய கடல் உணவு வர்த்தகம் பாதிப்பு

August 29, 2023

புகுஷிமா கதிர்வீச்சு அபாய அச்சத்தால் தென் கொரியாவில் கடல் உணவை சாப்பிட மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் அந்நாட்டு கடல் உணவு விற்பனை மந்தமாகியுள்ளது. இதன் காரணமாக கடல் உணவு விற்பனையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அணு உலையில் சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை அந்நாட்டு அரசு சமீபத்தில் பசிபிக் பெருங்கடலில் வெளியேற்றியது. இதற்கு பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கதிர்வீச்சு அச்சத்தால் தென்கொரியாவில் கடல் உணவை சாப்பிட மக்கள் மறுத்து வருகின்றனர். ஒரு ஆய்வின்படி, […]

புகுஷிமா கதிர்வீச்சு அபாய அச்சத்தால் தென் கொரியாவில் கடல் உணவை சாப்பிட மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் அந்நாட்டு கடல் உணவு விற்பனை மந்தமாகியுள்ளது.

இதன் காரணமாக கடல் உணவு விற்பனையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அணு உலையில் சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை அந்நாட்டு அரசு சமீபத்தில் பசிபிக் பெருங்கடலில் வெளியேற்றியது. இதற்கு பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கதிர்வீச்சு அச்சத்தால் தென்கொரியாவில் கடல் உணவை சாப்பிட மக்கள் மறுத்து வருகின்றனர். ஒரு ஆய்வின்படி, 92.4 சதவீத கொரிய மக்கள் கடல் உணவை தவிர்க்க போவதாக கூறியுள்ளனர். இதனால் கடல் உணவு வர்த்தகம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜப்பானிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கடல் உணவுகளுக்கு சீனா தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடல் நீரில் கதிர்வீச்சு அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுத்ததாக சீன சுங்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu