இங்கிலாந்தில் கத்திக்குத்து சம்பவத்தில் மூன்று சிறுமிகள் உயிரிழந்த விவகாரத்தில் தீவிர வலது சாரி அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இங்கிலாந்தில் உள்ள சவுத் போர்ட் நகரில் மூன்று சிறுமிகள் கத்தி குத்து சம்பவத்தில் உயிரிழந்தனர். இது தொடர்பாக 17 வயது நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது பயங்கரவாத தாக்குதல் என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர வலதுசாரி அமைப்பினர் சவுத் போர்ட் நகரத்தில் இருக்கும் மசூதி ஒன்றை குறிவைத்து கல்வீச்சு போன்ற வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மீதும் அந்த கும்பல் தாக்குதல் நடத்தியது. காவல்துறை வாகனங்களுக்கும் அந்த கும்பல் தீ வைத்தது. இதனால் போலீசார் காயமடைந்தனர். இதையடுத்து பொய்யான தகவல்களின் அடிப்படையில் கலவரத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அரசு எச்சரித்துள்ளது.