ஸ்பேஸ் எக்ஸ், கடந்த ஆகஸ்ட் 31 வெள்ளிக்கிழமை அதிகாலை 2 தொடர்ச்சியானபால்கன் 9ராக்கெட்களை வெற்றிகரமாக ஏவியது. புளோரிடாவின் கேப் கனவெரல் மற்றும் கலிபோர்னியாவின் வான்டென்பெர்க் விண்வெளி படை தளத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஏவுதல்கள் மொத்தம் 42 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை நிறுவின. ஒவ்வொரு ராக்கெட்டின் முதல் நிலையும் பசிபிக் கடலில் உள்ள கப்பல்களில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி, ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டின் தரையிறக்க முயற்சி தோல்வியடைந்தது. அதிலிருந்து 3 நாட்கள் கழித்து, 65 நிமிட இடைவெளியில், அடுத்தடுத்து 2 ராக்கெட்டுகளை ஸ்பேஸ் எக்ஸ் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க், சமீபத்திய தோல்வியிலிருந்து நிறுவனத்திற்கு விரைவான மீட்சியை கொடுத்ததற்காக திட்ட குழுவினரை பாராட்டி உள்ளார்.