அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஆகஸ்ட் 26 அன்று ஸ்பேஸ் எக்ஸின் போலாரிஸ் டான் ஏவ திட்டமிடப்பட்டது. முதலில் கூடுதல் விமான சோதனைகளுக்காக ஆகஸ்ட் 27 க்கும், பின்னர் ஹீலியம் கசிவு காரணமாக ஆகஸ்ட் 28 க்கும் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, புளோரிடாவின் ஸ்பிளாஷ் டவுன் பகுதிகளில் மோசமான வானிலை முன்னறிவிக்கப்பட்டதால், ஏவுதல் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. புதிய ஏவுதல் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், ஆகஸ்ட் 30 அன்று ஏவும் வாய்ப்பு உள்ளதக கூறப்படுகிறது.
விண்வெளியில் ஒரு தனியார் நிறுவனத்தால் நடத்தப்படும் முதல் விண்வெளி நடை என்ற சாதனையை போலரிஸ் டான் திட்டம் படைக்க உள்ளது. தொடர்ச்சியான தாமதங்களால் விண்வெளி ஆர்வலர்கள் ஏமாற்றமடைந்தாலும், இந்த திட்டம் விண்வெளி ஆராய்ச்சியில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என்று கருதப்படுகிறது.