20 ஸ்டார்லிங்க் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ்

நேற்று இரவு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 20 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது. இதன் மூலம், கடந்த 10 நாட்களுக்குப் பிறகு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சார்பாக விண்வெளி திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இது ஸ்பேஸ் நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான 61 வது விண்வெளி திட்டம் ஆகும். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம், 20 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் சுமந்து செல்லப்பட்டுள்ளன. அவற்றில் 13 செயற்கைக்கோள்கள் நேரடி கைபேசி இணைப்பை […]

நேற்று இரவு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 20 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது. இதன் மூலம், கடந்த 10 நாட்களுக்குப் பிறகு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சார்பாக விண்வெளி திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இது ஸ்பேஸ் நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான 61 வது விண்வெளி திட்டம் ஆகும்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம், 20 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் சுமந்து செல்லப்பட்டுள்ளன. அவற்றில் 13 செயற்கைக்கோள்கள் நேரடி கைபேசி இணைப்பை ஏற்படுத்துவதற்காக நிறுவப்படுகின்றன. ராக்கெட் கிளம்பி 8.5 நிமிடங்கள் கழித்து, பூஸ்டர் தரை இறங்கியது. இந்த பூஸ்டருக்கு இது 5 வது ஏவுதல் ஆகும். ராக்கெட் கிளம்பி ஒரு மணி நேரத்துக்கு பிறகு 20 செயற்கைக் கோள்களும் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu